சுவிஸ்லாந்தில் உணர்வெழுச்சி கொண்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)
சுவிஸ்லாந்தின் பேண் மாநிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சுவிஸில் இருந்து ஐபிசி தமிழ் செய்தியாளர் குமணண் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.
நிகழ்வு ஏற்பாடு
பேண் மாநிலத்திலுள்ள நாடாளுமன்றத்திற்கு முன்னால் அமைந்துள்ள திடலில் இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், முள்ளிவாய்க்கால் சிலைக்கான நினைவுச் சுடர் ஏற்றல் போன்ற நிகழ்வுகளுடன் மாலை 3 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வுகள் மாலை 05.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
சுவிஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் இளையேர் அமைப்பு மற்றும் அரசியல் துறையை சேர்ந்தோரால் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
பிரெஞ்சு,டொச்சு, இ்த்தாலி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் உரை வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டது.
நாளையதினம்(18) அங்கு பொது விடுமுறை நாள் என்பதால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.