முள்ளிவாய்க்கால் நினைவுக்கு பிரித்தானியாவிலும் அழைப்பு
முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு உட்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்து பிரித்தானியாவிலும் இனவழிப்பு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவு முன்றலில் இனவழிப்பு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையம் ஆகியன இணைந்து இந்த நினைவு தினத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இனவழிப்பு நாள் நிகழ்வுகள்
மே 18 இனவழிப்பு இன்று முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள "முள்ளிவாய்க்கால் நினைவு முன்றலில்" இனவழிப்பு நாள் நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன வழிப்புக்கு உட்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தும் அதேவேளை, தமிழ் மக்களுக்கான நீதி கோரலினை மீண்டும், மீண்டும் வலியுறுத்துவோம் என உலகத் தமிழர் வரலாற்று மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மாதம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.
எனவே மாவீரர் குடும்பங்களை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இனவழிப்பு நாள் நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், முள்ளிவாய்க்கால் நினைவு முன்றலில் அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி வழிபாடுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.