தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினால் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் வட்டுக்கோட்டை துணைவியல் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வுகளானது இன்று மாலை (05) மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் பொதுசுடரேற்றபட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
தொடர்ந்து வட்டுக்கோட்டையின் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்ட மக்களால் அஞ்சலி செலுத்தபட்டதுடன் இதனையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கபட்டுள்ளது.
மேலும், குறித்த நினைவேந்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெயந்தன் , சிறி ஜீவா ,மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி மற்றும் ஜனா சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/e99b56fd-ecc7-4bfb-895f-a16cc683076e/24-6648c736a6177.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e78a217e-70a8-4168-9704-4dfc96dde03d/24-6648c73729a80.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/da6d7ebf-39a5-43bb-8e30-5c2745c656c2/24-6648c737ac884.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b7ccd5f2-62fb-45d5-9c48-ad8c877b0ad4/24-6648c7383a08a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e7ace789-9d6e-4c6d-a389-7a37520ef5f7/24-6648c738be1b5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1b570f80-c601-46ea-adf8-eb91d7923252/24-6648c73945ed7.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8ebfcb51-ce18-4932-acf4-d203aabe585f/24-6648c739c5126.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d40b7b01-a6f7-4fe6-b22f-5faef6892941/24-6648c73a47e93.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)