அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

Sri Lankan Tamils M A Sumanthiran Ranil Wickremesinghe S. Sritharan Mullivaikal Remembrance Day
By Thulsi May 14, 2024 02:39 AM GMT
Report

வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து விட்டு எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வர வேண்டாம் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) சொல்லிவைக்க விரும்புகின்றோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13.5.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே எம்.ஏ. சுமந்திரன் (MA Sumandran) மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: குற்றம் சாட்டும் சிறீதரன்

தமிழர் தாயகத்தில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: குற்றம் சாட்டும் சிறீதரன்

காவல்துறையினரின் மிக மோசமான செயல்

திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தல் நிகழ்வை காவல்துறையினர் நீதிமன்றக் கட்டளை ஊடகத் தடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை | Mullivaikal Remembrance Sumanthiran Blame Ranil

நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானவை. ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களிலே ஈடுபடுகின்றார்கள். அதிபர் ரணிலுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றோம்.

அதாவது உங்களது கட்டளையின் பெயரிலே அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பெயரிலே நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப் போகும் அதிபர் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம்.

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி...! மறைக்கப்படும் உண்மைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மாணவி...! மறைக்கப்படும் உண்மைகள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு

மக்களின் வாக்கு கேட்டு வரவேண்டாம்

மற்றைய தலைவர்களிடத்திலேயும் நாங்கள் இதனைச் சொல்ல விரும்புகின்றோம். எமது மக்கள் தமக்கு நிகழ்ந்தவற்றை அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கே எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம் என்பதையும் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை | Mullivaikal Remembrance Sumanthiran Blame Ranil

இது அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகின்றோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாகக் கூறும் செய்தியல்ல. அது வேறு விடயம்.

அது சம்பந்தமாக எமது கட்சி (இலங்கைத் தமிழரசுக் கட்சி) (Ilankai Tamil Arasu Kachchi) எதிர்வரும் 19 ஆம் திகதி கூடி சரியாக ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்கும். ஆகவே, அது சம்பந்தமான வேறு விடயங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஏற்கனவே எமது கட்சியின் இரா.சம்பந்தன் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டாம் என்றும் அறிவித்திருக்கின்றார்.

அதற்கு முன்னரும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு பொருத்தமற்ற நடவடிக்கை என்று எமது கட்சியின் பெருந்தலைவர் அறிவித்திருக்கின்றார். நாங்கள் அவருடைய கருத்தையும் ஏனையோருடைய கருத்தையும் சீராக ஆராய்ந்து பொருத்தமான முடிவுக்கு வருவோம் என்றார்.

அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர்

அச்சுறுத்தும் சுன்னாகம் காவல்துறை : அச்சத்துடன் சாட்சியமளிப்போர்

தமிழ்ப் பொது வேட்பாளர் 

கேள்வி:- அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. இதற்கான பொது வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரனை நிறுத்தலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. அது உண்மையா? உங்களிடம் இது பற்றி கேட்கப்பட்டதா?

அத்துமீறும் காவல்துறை...! தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்: ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை | Mullivaikal Remembrance Sumanthiran Blame Ranil

பதில்:- "ஆம். உத்தியோகபூர்வமாக அனைவரும் இணைந்து வந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால், இந்தப் பேச்சு எழுந்த வேளையிலே சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) என்னிடம் ஒரு தடவை கேட்டிருந்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பொருத்தமானவர் நீங்கள்தான் என்றும், ஒரு சிலரால் இது குறித்து பகிரப்பட்டது என்றும், அது குறித்து எனது நிலைப்பாடு என்ன என்றும் என்னிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார்.

நான் அப்போதே எனது நிலைப்பாட்டைச் சொல்லியிருந்தேன். அப்படியாகத் தமிழ் பொது வேட்பாளராக நான் அதிபர் தேர்தலிலே போட்டியிடமாட்டேன். அதிபராக வருவதற்கு அதிபர் வேட்பாளராக, அதிபர் பொது வேட்பாளராக, அதிபர் எதிரணி வேட்பாளராக என்னைக் களமிறங்கச் சொன்னால் அது வேறு விடயம். இந்த நாட்டிலே எந்தச் சமூகத்தவரும், எந்தச் சமயத்தவரும், எந்த மொழியைப் பேசுபவர்களும் அதிபராக வர முடியும்.

அதற்குப் போட்டியிட முடியும். ஆகையினாலே அப்படியான சூழ்நிலையிலே நான் மட்டுமல்ல வேறு யாராவதும் போட்டியிட அழைக்கப்பட்டால் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

ஆனால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு, அதிபர் தேர்தலிலே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த அபிலாஷைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கும் எனக்கும் இணக்கம் இல்லை." - என்றார். 

இலங்கையில் தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்க கூட உரிமை இல்லை...!

இலங்கையில் தமிழர்களுக்கு துக்க தினத்தை அனுஷ்டிக்க கூட உரிமை இல்லை...!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025