லண்டன் நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்!
Sri Lankan Tamils
Tamils
London
Mullivaikal Remembrance Day
World
By Shalini Balachandran
லண்டனில் தமிழினப் படுகொலைக்கு எதிராகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் நாடாளுமன்றம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழு
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய இராச்சியம் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து மேற்படி போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள், தமிழ் மக்களுக்கான நீதி கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி