18வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : இயக்குநர் கௌதமனின் எதிர்பார்ப்பு

Tamils Mullivaikal Remembrance Day Tamil nadu
By Kajinthan May 18, 2026 04:41 PM GMT
Report

18வது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் வடமலை கௌதமன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இனவழிப்பு நடந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒரு கீற்று, சிறு வெளிச்சம் கூட இல்லாமல் தமிழினம் ஒவ்வொரு ஆண்டினையும் கடந்த வண்ணம் உள்ளது.

தேசிய தலைவர் ஆண்ட உன்னத சுவடுகள்  கரைந்தவாறு உள்ளது

எனது தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான தேசிய தலைவர் மேதகு ஆண்ட அந்த உன்னத சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தவாறு உள்ளது. அந்த அறம் மிக்க நிலத்தில் சிங்கள குடியேற்றங்களால் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

18வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : இயக்குநர் கௌதமனின் எதிர்பார்ப்பு | Mullivaikkal Commemoration In Taminadu

ஆனால் உலகம் முழுவதும் வாழும் தமிழினம் ஒரு தீர்க்கமான, அல்லது தீவிரமான முன்னெடுப்புகளை செய்யாமல் ஒரு உறக்க நிலையில் தான் இருக்கிறது என்றுதான் நான் நம்புகிறேன். தீர்வு திட்டத்துக்கான முன்னெடுப்பு ஒரு தகிப்புடன் இடம்பெறுவதாக எனக்கு தெரியவில்லை.

அந்த இனவழிப்பு நடந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரும் போராட்டங்களை கல்லூரி மாணவர்களுடன் இணைந்து முன்னெடுத்தோம். அதனால் இன்றும்கூட வழக்குக்காக நீதிமன்றங்களுக்கு அலைந்த வண்ணம் இருக்கிறோம்.

20ற்கும் மேற்பட்ட ஆவண காட்சிகளை நான் தயாரித்துள்ளேன். உடைந்துபோன, நார்நாராக கிழிந்துபோன பிஞ்சுகளினதும், பெண்களினதும், என பலரது உடல்களை உள்ளடக்கி தொகுத்து தொகுத்து, தொடுத்து தொடுத்து ஆவணப்படம் தயாரித்து ஒரு பைத்தியம் ஆகின்ற மனநிலைக்குள் தள்ளப்பட்டேன்.

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் : முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் : முதலமைச்சர் விஜய் வெளியிட்ட பதிவு

ஏன் இதுவரை ஒன்றாக நிற்கவில்லை

தமிழ்நாட்டில் இருக்கின்ற எனக்கே இந்த தகிப்பு இருக்கிறது என்றால் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு எவ்வளவு இருக்கும். ஏன் இதுவரை ஒன்றாக நிற்கவில்லை? ஏன் ஒன்றாக ஒரு வியூகத்தை எடுக்கவில்லை? இதெல்லாம் வெறும் புலம்பலல்ல, பெரு வலி.

18வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : இயக்குநர் கௌதமனின் எதிர்பார்ப்பு | Mullivaikkal Commemoration In Taminadu

17 ஆண்டுகள் கடந்த நினைவேந்தல்கள், மாவீரர் தினங்கள் உள்ளிட்ட இடத்தில் நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் நிற்கிறோம். அழுகிறோம். ஆனால் ஒரு தீர்வினை நோக்கி மட்டும் செல்லவில்லை. இது 17 ஆண்டுகள் கடந்து, 50 ஆண்டுகள் கடந்து, 100 ஆண்டுகள் கடந்து ஒரு சடங்காகவே போய்விடுமோ என்று கவலையாக உள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் 17வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் 17வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நந்திக் கடலை செங்கடலாக பார்த்த உலகம்

பல்லாயிரக்கணக்கான போராளிகள், இலட்சக்கணக்கான மக்கள் அந்த கொடிய யுத்தத்தில் மடிந்தார்கள். உலகத்தில் எந்த ஒரு இனமும் இந்தளவுக்கு நேர்மையாக போராடி இருக்காது. எந்தவொரு இனமும் இந்தளவு இரத்தத்தை ஒரு இடத்தில் சிந்தியிருக்காது. நந்திக் கடலை செங்கடலாக இந்த உலகம் பார்த்தது.

18வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : இயக்குநர் கௌதமனின் எதிர்பார்ப்பு | Mullivaikkal Commemoration In Taminadu

2008ஆம் ஆண்டு நான் தயாரித்த முதல் ஆவணப் படத்தின் பெயர் "இனி என்ன செய்யப் போகிறோம்". 17 ஆண்டுகளுக்கு பின்னரும் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற அந்த ஒற்றை கேள்வி மட்டுமே எங்கள் கண்முன்னாடி நிற்கிறது. ஆகவே பழையதை பழுது பார்க்கின்றது தான் இனி தமிழனுக்கு புதிய ஒரு வாசலை, விடியலை, ஒரு வெளிச்சத்தை, ஒரு விடுதலையை கொடுக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

18வது ஆண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் ஒரு விடியலுக்கான தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகத்துக்கு நாங்கள் சொல்வோம். விடுதலை போராட்டத்தில் இழந்தவை ஒரு இழப்பல்ல என்று பல நாடுகளின் வரலாறுகள் சொல்லியிருக்கின்றன. ஆக பல்லாயிரக்கணக்கான மாவீரர் தெய்வங்களின் பேரிழப்பும், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களின் அந்த பறிகொடுப்பும் தமிழினத்துக்கான விடுதலைக்கான செயலாக இருக்கட்டும்.

எதிர்க்க துணிந்தால் தமிழ் வெல்லும், எதற்கும் துணிந்தால் மட்டுமே தமிழால் வெல்வோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026