திருகோணமலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் பாட்டாளிபுரம் பகுதியில் இன்று (12.05.2026) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் நிகழ்வின் ஆரம்பமாக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள்
இந்த நினைவேந்தல் நிகழ்வில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |