முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு
arrest
court
Mullivaikkal Memorial Day
By Vanan
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்குடா காவல்துறையினரால், கடந்த மார்கழி 27ஆம் திகதி இரு பெண்கள் உட்பட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு நேற்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தால் மீண்டும் 12ஆம் மாதம் 20 திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கபடாத காரணத்தினால் 1 வருடங்கள் கடந்தும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்