இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்
தங்களுக்கென இயக்கம் இருந்திருந்தால் இப்படியான துயரங்கள் நேர்ந்திருக்காது என்று தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலானது இன்றையதினம் தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மூன்று தசாப்த கால யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட நிலையில் 15 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்றன.
கொக்குத்தொடுவாய் மண்
அந்த வகையில், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மண்ணில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பல தாய்மார்கள் தங்களது வேதனையை வாய்விட்டு கதறி கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, தான் தன்னுடைய பிள்ளைகள் யாரும் இன்றி தனி மரமாய் நிற்பதாகவும் மற்றும் இயக்கம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நேர்ந்திருக்குமா என்று கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பலரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |