அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த குரல்..!
ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் (Australia) கிறீன்ஸ் கட்சியின் செனெட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈழத்தமிழர்கள் இன்றுவரை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் ஒடுக்குமுறையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்றுவரை அரசாங்கத்திலும் இராணுவத்திலும் உயர் பதவிகளில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிரந்த பாதுகாப்பு
மேலும், இதன்போது தமிழர்கள் பலரும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு நிரந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், 2009 இல் நடந்த இனப்படுகொலையின் 15வது வருட நினைவாகப் பேசியதற்காக பசுமைக் கட்சியின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜுக்கு தமிழ் அகதிகள் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |