வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள்

Sri Lankan Tamils Tamils Jaffna Sri Lanka
By Shalini Balachandran May 13, 2026 11:32 AM GMT
Report
🛑 புதிய இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13-05-2026), யாழ். தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்தோடு, அல்லைப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பங்கேற்றவர்கள் காய்ச்சிய கஞ்சியைச் சிரட்டையில் குடித்து, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலங்களைத் தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

🛑 செய்திகள் - Thampithurai Piratheepan

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்

🛑 இரண்டாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, வடமராட்சி மந்திகை சந்தைப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் இடம்பெற்றன.

இதில் முதல் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகப் பொது ஈகைச் சுடரினை மாவீரர்களின் சகோதரன் ராஜி ஏற்றிவைக்க மலர் அஞ்சலியைச் சோமஸ்கந்த குருக்கள் மற்றும் தனஞ்சய குருக்கள் ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மக்களால் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக உப்புக் கஞ்சி வழங்கப்பட்டது.

இதில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

🛑 செய்திகள் - Khandeepan Thangarajah

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

வடுக்களைச் சுமந்து வரும் 17 ஆவது ஆண்டு: தமிழர் பகுதிகளில் தொடரும் நினைவேந்தல்கள் | Mullivaikkal Remembrance Week Day 2 Events

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

🛑 முதலாம் இணைப்பு

இறுதி யுத்தத்தில் குடித்து உயிர்வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் குருநகரில் இன்று (13-05-2026) காலை முன்னெடுக்கப்பட்டது.

மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 31 கடற்றொழிலாளர்களின் நினைவுத்தூபியின் முன்பாக கஞ்சி காய்ச்சப்பட்டு வழங்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் உப்பில்லாது காய்ச்சிய கஞ்சியைப் போன்று காய்ச்சப்பட்டுச் சிரட்டையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இதன்போது குருநகர் பங்குத்தந்தை றொக்ஸ், பாடசாலைச் சிறுவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் குடித்து இறுதி யுத்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

🛑 செய்திகள் - Thampithurai Piratheepan

2.5 மில்லியன் டொலர் மோசடி : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

2.5 மில்லியன் டொலர் மோசடி : மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019