சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில் படுகொலை - இருவர் கைது
யாழில் சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் நகைகள் மற்றும் பணம் களவாடப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், இன்று (06.06.2026) அதிகாலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |