பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட முருகன் ஆலயம்
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த மக்களால் புதிய முருகன் ஆலயம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அதாவது பிரித்தானியாவின் நோ போக் எனும் பகுதியில் நோர்விஜ் எனும் நகரத்தில் நோர்விஜ் முருகன் எனும் ஒரு ஆலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(15.03.2024) அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் அர்ச்சனை
நோர்விஜ் பகுதியில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் பேசும் மக்களின் முயற்சியின் பலனாக இந்த ஆலயம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலவிவந்த ஆலயத்துக்கான தேவையின் நிமித்தம் இந்த ஆலயம் கட்டியெழுப்பப்படவுள்ளது.
மேலும், குறித்த ஆலயத்தின் முதல் அர்ச்சனை தேசியத்தலைவரின் குடும்பத்துக்காக செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
வெடுக்குநாறி மலை
அது மட்டுமன்றி புதிய ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினர்களால் அண்மையின் வெடுக்குநாறி மலையில் அரச படைகளால் வழிபாட்டு உரிமைக்கெதிராக நடாத்தப்பட்ட திட்டமிட்ட அராஜகத்துக்கெதிராக எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியதுடன் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் உலகெங்கும் வாழ்ந்துவரும் தமிழர்கள் சிறிலங்காவில் இடம்பெறும் அரச வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கெதிராக இவ்வாறு பல வழிகளிலும் எதிர்ப்புக்களை வெளியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையும் குறிப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |