காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கவுள்ள எலான் மஸ்க்
எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் கண்ணில் பட்டவர்களை சுட்டுக் கொன்றதாகவும் 200 இற்கு மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஐந்து நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
மருத்துவமனைகளின் மீது தாக்குதல்
இதனால் காசாவின் வடக்குப் பகுதி சீர்குலைந்துள்ளதுடன் அல்-ஷிபா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் கஷ்ரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ள நிலையில் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்ட யோகம்! உங்களுக்கு என்ன நடக்கப்போகிறது தெரியுமா..! இன்றைய ராசி பலன்கள்
இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |