ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் திணக்களத்தில் முறையிட்ட முஸ்லிம் தரப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயலர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறை தலைமையகத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
சிங்கள தனியார் ஊடகம் ஒன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தமை தொடர்பிலேயே அவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம் மற்றும் சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியேரே இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.
