இரு முஸ்லிம்களுக்கு கிழக்கு ஆளுநரால் உயர்பதவி வழங்கி வைப்பு
இரண்டு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உயர் பதவிகளை வழங்கி வைத்துள்ளார்.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக மன்சூர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் நிர்வாகமாக நசீர் என்றவருமே இவ்வாறு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்நியமனங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கருத்து தெரிவிக்கையில், “ஆளுநரை பொறுத்தமட்டில் கடந்த மூன்று மாத காலங்களாக மதம் சார்ந்து எந்த நியமனங்களும் வழங்கவில்லை, தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாக கொண்டு அரச நியமனங்களை வழங்கியுள்ளார் ” என தெரிவித்துள்ளனர்.
நியமனங்கள்
அத்தோடு தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாக கொண்டு குறித்த அரச நியமனங்களை வழங்கியுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.


இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் அனைத்து நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் முஸ்லிம்களின் கையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.