பிரதமர் அலுவலகத்திற்கு முன்பான பதற்றம்! போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
Sri Lankan Tamils
Colombo
Trincomalee
Sri Lankan Peoples
By Dilakshan
இந்திய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்துநகர் விவசாயிகள் கொழும்பில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகள்
அதன்போது, 'விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பி கொடு, நெல் வயல்கள் இல்லாமல் நாங்கள் மண்ணையா சாப்பிடுவது, பொய்கள் வேண்டாம் என்ற அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





