சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முத்து நகர் பகுதி மக்கள்
தங்கள் காணி உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி முத்து நகர் பகுதி மக்கள் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
திருகோணமலை (Trincomalee) மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று (17) காலை குறித்த போராட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சத்தியாக்கிரக போராட்டம்
அரசுக்கு எதிதாக பல வகைகளில் போராடிய போதிலும் இது வரை அவர்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தினை தாம் அரம்பித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பொதுமக்களது போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக ஊடகங்களிடம் பேசிய ஜன அரகல இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, முத்து நகர் மக்களின் காணி உரிமைகள் மீட்கப்படும் வரை இந்த உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


