மூதூரில் தொடரும் விபத்துக்கள்: அதிகாரிகளின் அசமந்த போக்கு
மூதூர் (Mutur) பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மாட்டுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்றையதினம் (25.10.2024) மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தோப்பூரில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் கோரிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தோப்பூர் வைத்தியசாலை வீதியில் தினந்தோறும் இரவு வேளையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரயாணம் செய்கின்ற நிலையில் குறித்த வீதியில் மின் விளக்குகள் ஏதும் இதுவரை பொருத்தப்படவில்லை.
இதனால் இந்த வீதியில் அதிகளவு வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் விபத்துக்களை கட்டுப்படுத்த தோப்பூர் வைத்தியசாலை வீதிக்கு வீதி மின் விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
