ராமேஸ்வரம் கடல்பகுதியில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு
இலங்கைக்கு(sri lanka) நெருக்கமாக உள்ள ராமேஸ்வரம்(rameswaram) கடல்பகுதியில் மர்மமான முறையில் பறந்த ட்ரோனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக உளவுதுறை காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று(15) மர்ம ட்ரோன் பறந்து சென்றதாக இந்தியகடற்படையின் ராடரில் பதிவாகி உள்ளது.
உளவு பிரிவு காவல்துறையினர் விசாரணை
இதை தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள மத்திய, மாநில உளவு பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லை பகுதியில் பறந்து சென்ற ட்ரோன் எந்த பகுதியில் இருந்து வந்தது யார் மூலம் பறக்க விடப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய, பாகிஸ்தான் பதற்றம் உச்சம் தொட்டுள்ள நிலையில் குறித்த மர்ம ட்ரோன் பறந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
