பிரித்தானியாவில் வரலாறு காணாத வறட்சி - பலித்தது பாபாவின் தீர்க்கதரிசனம்!
உலகம் சந்திக்கவுள்ள பல இன்னலகள் தொடர்பில் கண் பார்வை இல்லாத பாபா வங்கா என்ற தீர்க்கதரிசி முன்னரே கணித்திருந்தார்.
அதனடிப்படையில், பிரித்தானியாவில் கடுமையான வறட்சி ஏற்படும் எனவும் கணித்திருந்தார். இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமாக வறட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெருநகரங்கள் வறட்சி மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார்.
பல விடயங்களை துல்லியமாக கணித்த பாபா
அதனடிப்படையில், இப்போது உலக நாடுகள் பல தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னள. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாபா வங்கா கூறியது உண்மையாகிவிட்டதோ என பலரும் எண்ணத்துவங்கியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, கண் பார்வை இல்லாத பாபா வங்கா, இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர்.
தற்போது உலகம் சந்தித்து வரும் வறட்சி குறித்தும் கணித்துள்ளார். கண் தெரியாதவராக இருந்தும் பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.
பெரும் புயலில் சிக்கியதால் கிடைத்த வரம்
1996இல் அவர் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா வங்கா பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, பல நாட்களாக காணால் போயிருந்தார்.
பல நாட்களுக்குப்பின் கண்களில் மண் மூடிய நிலையில் அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அதனையடுத்து அவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
துல்லியமாக பலித்த முதல் கணிப்பு
அதன் பிறகு தனது கண் பார்வையை இழந்த நிலையில் தனது முதல் கணிப்பை கணித்த பாபா, தான் காணாமல் போனபோது, தனக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் மற்றும் மற்றவர்களை குணமாக்கும் சக்தி கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டில் இரண்டு மோசமான விடயங்கள் நடக்கும் என்று கணித்துள்ளார். அவற்றில் ஒன்று ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவின் சில பகுதிகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கணித்திருந்தார்.
அதற்கமைய இந்த ஆண்டின் துவக்கத்தில், அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.