நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம்: ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்
நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்னதாக இரு வார கால அவகாசம் வழங்கினார்.
கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) வியாழக்கிழமை முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு
இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைக்கு அமைவாக உரிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தொடர்வது பொருத்தமானதாக இருக்கும் என ஆளுநர் தனது ஆரம்பக் கருத்தில் குறிப்பிட்டார்.
அதேவேளை, இது இரு சமூகங்களைச் சார்ந்த உணர்வுபூர்வமான விடயம் என்பதால், கிடைக்கப்பெறும் அரச ஆவணங்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிதானமாகவும் நியாயமாகவும் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதன்பின்னர், தொடர்புடைய இரு தரப்புக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
