நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் 21 இலட்சம் திருட்டு: மூவர் கைது
யாழில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (06-05-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய நிர்வாகம்
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றைய தினம் அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்துத் துரித கதியில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், இருவரைக் குறிகட்டுவான் பகுதியிலும் மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு கைதான மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் 16, 17 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |