தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி
நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்றையதினம் (02.01.2026) விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
அந்தவகையில் நாளையதினமும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் நாக விகாரை விகாராதிபதி தலைமையிலான குழுவானது இன்றையதினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 7 மணி நேரம் முன்