இறுதி யுத்த வெற்றி யாரைச் சாரும்! எதிர்க்கட்சி வெளிப்படுத்திய தகவல்
நாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராகக் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மாறாக சர்வாதிகார போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக் கூடாது. எனவே ஜனாதிபதியின் அந்த கொள்கைக்கு எதிராக போராடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்ட பெருமை 90 வீதம் அப்போதைய இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையே சாரும்.
அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பங்களிப்பு காணப்பட்டது.
ஆனால் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்க்ஷவின் செயற்பாடுகள் விமர்சனத்துக்குரியதாகவே இருந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.