நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா - பாரம்பரிய முறைப்படி ஏற்பாடுகள் ஆரம்பம்
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Vanan
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ். மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (20) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைப்படி
இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.





10ம் ஆண்டு நினைவஞ்சலி