நல்லைக் கந்தனின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் (படங்கள்)
மகோற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு அந்தண சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் இசைக்க தவில் நாதஸ்வரம் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் மஞ்சத்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.எதிர்வரும் 18 ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 19 ஆம் கார்த்திகை உற்சவமும் 24 ஆம் திகதி மாலை சப்பறத்திருவிழாவும், 25 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 26 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று அன்றையதினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று (01) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.