மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை! நாமல் வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்புக்கு குடிபெயர்ந்திருந்தாலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும் கொழும்பில் உள்ள நுகேகொடை இல்லத்திலும் மாறி மாறி தங்கிவருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பம் யார் என்பது தனக்குத் தெரியும் என்பதால், குறித்த நண்பர் மகிழ்ச்சியுடன் எந்த பயமும் இன்றி அந்த வீட்டை வழங்கியதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்து வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நடவடிக்கைகள்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்வார். எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவார்.

எங்கள் நண்பர் ஒருவர் அந்த வீட்டை எங்களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கினார். எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் யார் என்பது தெரியும். அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை. அவர்கள் பயப்படாததால் எங்களுக்கு வீடுகளைக் கொடுக்கிறார்கள்." என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுதந்திரம் தடையின்றி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவர் மகிழ்ச்சியுடன் பார்த்து வருவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |