முன்னாள் எம்.பி ஒருவரின் பிரித்தானிய பயணத்தில் நாமலுக்கும் தொடர்பு...
முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது பாடசாலை காலத்தில் பிரித்தானியாவுக்கு அனுப்ப தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உதவிப்புரிந்ததான கருத்துக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இவ்வாறு சமூக ஊடகங்களில் கட்டமிடப்படும் கருத்துக்களில் சுட்டிக்காட்டப்படும் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமச்சந்திர தொடர்பான விடயங்களே இவ்வாறு வெளிவர ஆரம்பித்துள்ளன.
பிரத்தியேக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஹிருணிக்கா வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த காலத்தில் ராஜபக்சர்களை மேடைகளிலும் சரி, ஊடகங்கள் முன்னும் சரி, கடுமையாக விமர்சித்த ஹிருணிக்கா , தற்போது மொட்டு தரப்புக்கு தனது ஆதரவு நிலைகளை வெளிப்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஹிருணிக்கா, நாமல் தொடர்பில் கூறிய கருத்துக்கள், விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 14 மணி நேரம் முன்