ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ச!
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் நோக்கம், தற்போதைய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை மக்களுக்கு நினைவூட்டுவதே என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, “பேரணி தொடர்பான கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும்.
தொடர் கலந்துரையாடல்கள்
ஏற்கனவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, எனினும், இன்று பேரணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்தித்தோம்.

அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதும், மக்கள் அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட ஊக்குவிப்பதே பேரணியின் நோக்கம்.
அரசாங்கத்தின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்தப் பேரணியில் இணைவார்கள்.
அதன்படி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இந்தப் பேரணியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், கலந்துரையாடல்களின் பின்னர் ஏனைய கட்சிகள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




