காவல்துறையினரை தாக்கிய அரசாங்க எம்.பி! கொந்தளிக்கும் நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை மா அதிபரை (IGP) கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்து தெரிவ்க்கையிலேயே அவர் இவ்வாறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தாக்குதல் சம்பவம்
வீதிகளில் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு சேவை செய்ய வெட்கப்பட வேண்டும் என நாமல் அதன்போது கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு உரையாற்றிய நாமல்,
தற்போதைய காவல்துறை மா அதிபர், நாட்டின் காவல்துறை மா அதிபராக செயல்படவில்லை எனவும் மாறாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் காவல்துறை மா அதிபராகவே அவர் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் அழுத்தம்
அத்தோடு, இதுபோன்ற சம்பவங்கள் அரசியல் அழுத்தம் மற்றும் பழிவாங்கலுக்கு பயந்து காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளை சுயாதீனமாகச் செய்யத் தயங்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளன என்று நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கஞ்சா அறுவடையுடன் தொடர்புடையவர்கள் என்று ராஜபக்ச மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், சட்ட நடைமுறையாக்கத்தில் அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து காவல்துறை மா அதிபர் அமைதியாக இருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக நாமல் தொடர்ந்தும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |