நாமல் எனக்கு தாய் தந்தை போன்றவர்.. பிணையில் விடுவிக்கப்பட்ட அர்ச்சுனா அறிவிப்பு
செப்டம்பர் (22) அன்று கோட்டை தொடருந்து நிலையம் முன் தனது வாகனத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி காவல்துறையினரின் கடமையைத் தடுத்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று(29)கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எம்.பி.யை கடுமையாக எச்சரித்த நீதவான், தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
எனக்கு தாய் தந்தை போன்றவர்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாமல் ராஜபக்ச, டி.வி. சானக மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பலர் இந்த நிகழ்வில் நீதிமன்றத்தில் இருந்தனர்.
பிணை வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அர்ச்சுனா ராமநாதன், நாமல் ராஜபக்ச தனக்கு ஒரு தாய் தந்தை போன்றவர் என்று கூறினார்.
“நான் உங்களுக்கு நேரடியாகச் சொல்கிறேன்.. இன்று எனக்கு பெற்றோர் இல்லை. எனவே, என் பெற்றோருக்குப் பதிலாக என் சகோதரி மற்றும் நாமல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன். எனக்கு இன்னும் கௌரவம் இருக்கிறது. எனவே, நமல் ஏதாவது தவறு செய்திருந்தால், அவர் மீது வழக்குத் தொடருங்கள். ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளாதீர்கள்.”என்றார்.
அற்ப காரணங்களுக்காக எம்.பிக்கள் நீதிமன்றில் முன்னிலை
அப்போது ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அர்ச்சுனாவைப் பார்க்க வந்ததாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் வேலை செய்ய முடியாததால், அற்ப காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
