பிரித்தானியா விதித்துள்ள தடை : கண்டனம் வெளியிட்டுள்ள நாமல்
இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (x) இன்று (25) பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிரித்தானியாவின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும்.
தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு
இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி, சலுகைகளை அனுபவித்து, நமது தேசத்தின் நல்லிணக்கத்தை அவதானத்திற்கு உட்படுத்துவதாகும்.
Sri Lanka was the first nation to fully defeat terrorism, yet the West continues to selectively target our war veterans while ignoring those who funded and justified LTTE brutality. The latest UK sanctions aren’t about human rights—they’re the result of relentless LTTE-backed…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 25, 2025
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த தடைகள் ஊடாக நமது இராணுவத்தின் மன உறுதி வீழ்ச்சிடைய கூடும், இதுபோன்ற மற்றொரு நெருக்கடி ஏற்பட்டால், இராணுவத்திற்கு போராடுவதற்கு தைரியம் இல்லாமல் போகலாம்.
அத்துடன், இந்த தடைகளுக்கு பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை. சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் எவரையும் தடையாக இருக்க அனுமதிக்க மாட்டோம்.
போர் வீரர்களை பாதுகாப்போம்
இதன்போது, சில சர்வதேச அரச சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக சலுகைகளைப் பெறும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் ஆளாக வேண்டாம்.
இதற்கிடையில், வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்களை தாக்கும்போது, அரசாங்கம் அவர்களை பாதுகாக்கிறதா அல்லது மௌனமாக இருக்கிறதா?
அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமது போர் வீரர்களை பாதுகாப்போம், அவர்கள் செய்த தியாகங்கள் நமது சமாதானத்தை பாதுகாத்தன, அவர்களுடைய பாரம்பரியத்தையும் சீர்குலைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
