தேசிய விளையாட்டுச் சங்கங்கள் சிலவற்றின் பதிவுகளை ரத்து செய்த நாமல்- வெளியானது வர்த்தமானி!
gazette
cancel
namal rajabhaksha
national sports associations
By Kalaimathy
இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பான விசேட வர்த்தமானி நேற்றிரவு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட விளையாட்டுத்துறைகளான
இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம்,
இலங்கை ஜுடோ சங்கம்,
இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம்,
இலங்கை சர்பிங் சம்மேளனம்
இலங்கை ஜுஜிட்சு சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகளே தற்காலிகமாக இரத்தாகியுள்ளன.
இருப்பினும் இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான அமல் எதிரிசூரிய உரிய அதிகாரம் பொருந்தியவராக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி