முக்கிய பதவியில் இருந்து விலகிய நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் வெற்றிடமாக உள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சபாநாயகர் அறிவிப்பு
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா பீடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகலவினால் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதியன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, அது குறித்து ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான உபாலி பன்னிலகே மற்றும் ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவொன்று தன்னால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 18 மணி நேரம் முன்