சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மீண்டும் ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு (Elephant pass salt) என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் மாற்றம்
இதேவேளை வடபகுதியில் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளமானது தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டபோது ரஜ உப்பு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த செயற்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
