இரகசியமான முறையில் போதை மாத்திரைகளை கடத்திய வைத்தியர் கைது
கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனை
குறித்த வைத்தியர் 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், குறித்த வைத்தியர் இரவு நேரத்தில் இரகசியமாக காரில் சென்று பல்வேறு பகுதிகளில் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் போதை மாத்திரைகளை பெற்றுக்கொண்டு இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த வைத்தியர் இன்று (14) கம்பளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |