பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோள் கண்டுபிடிப்பு
ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2008 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் கோளுக்கு சா 1107 - 7626 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அகோர பசி
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் இந்த இளம் கோள், அகோர பசியுடன், கிடைத்ததை எல்லாம் விழுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசியுடன் ஒரு கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாயு பொருட்கள்
இக்கோள் ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைல்கல் இந்த அளவு மற்றும் வேகம், இதுவரை பார்த்திராத ஒன்று என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக வளர்வதை பார்ப்பது என்பது பொதுவான புரிதலை மாற்றியமைப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிர வளர்ச்சி
சா 1107 - 7626 கோளின் தீவிர வளர்ச்சி, நட்சத்திரங்கள் உருவாகும் போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் துாண்டப்படுகிறது என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக்கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இது பற்றி கூடுதல் தகவல்களை பெற, விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
