50 ஆண்டுகளின் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா
சுமார் 50 ஆண்டுகால இடைவெளியின் பின் நிலவை நோக்கி மனிதர்களை ஏற்றிச் செல்லும் நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்ட்டெமிஸ் 2' (Artemis II) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலவைச் சுற்றி வருவதற்காக நான்கு விண்வெளி வீரர்களுடன் நாசாவின் 'ஆர்ட்டெமிஸ் 2' விண்கலம் நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
விண்வெளி வீரர்களால் இந்த விண்கலத்திற்கு 'இன்டெக்ரிட்டி' (Integrity) எனப் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வுப் பயணம்
குறித்த விண்கலத்தின் நிலவைச் சுற்றியான இந்த ஆய்வுப் பயணம் மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1972 ஆம் ஆண்டு இடம்பெற்ற அப்பல்லோ திட்டத்தின் இறுதிப் பயணத்திற்குப் பிறகு, நிலவை நோக்கிய மனிதர்களின் முதல் பயணம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதன்கிழமை வெள்ளை மாளிகையிலிருந்து ஆற்றிய தனது இரவு நேர நாட்டு உரையை, ஆர்டெமிஸ் II-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக நாசா குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ஆரம்பித்தார்.
வாழ்த்து தெரிவித்த ட்ர்ம்ப்
அதன்படி, "ஆர்டெமிஸ் IIஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக நாசா குழுவினருக்கும், நமது துணிச்சலான விண்வெளி வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து நான் தொடங்குகிறேன்," என்று ட்ரம்ப் நாட்டு மக்களிடம் கூறினார்.

அத்துடன் "இதுவரை எந்தவொரு மனித விண்கலமும் பறந்ததை விட இது அதிக தூரம் பயணிக்கப் போகிறது. அவர்கள் வழியில் இருக்கிறார்கள், கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்." எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்