முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்
தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர காலமானார்.
மகிந்த விஜேசேகர இன்று (02) காலை தனது 83 ஆவது வயதில் காலமானதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான இவர், 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்
மேலும், தனது அரசியல் வாழ்வில் பல அமைச்சர் பதவிகளையும் வகித்துள்ளார்.

2009-ஆம் ஆண்டில், அக்குரெஸ்ஸாவில் நடைபெற்ற ஒரு மத நிகழ்வைக் குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர படுகாயம் அடைந்தார்.
அவர் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியபோதிலும், அச்சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்