“லேண்ட்சாட் 9” மூலம் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம் வெளியானது!
sri lanka
people
NASA
By Shalini
“லேண்ட்சாட் 9” செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் முதல் ஒளிப் படங்களை நாசா வெளியிட்டது.
லேண்ட்சாட் 9 என்பது NASA மற்றும் US Geological Survey (USGS) ஆகியவை இணைந்து செயல்படுத்தும் செயற்கைக்கோள் திட்டமாகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது.
பூமியின் வளங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது, பூமியில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவை மக்களுக்கு உணர்த்துவதற்கும் இந்தப் புகைப்படங்கள் உதவும்.
இந்த செயற்கைக்கோள் தொடர்பாக NASA நிர்வாகி பில் நெல்சன் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
Landsat திட்டமானது "சக்தி என்பது உயிர்களை மேம்படுத்துவது மட்டுமல்ல, உயிரைக் காப்பாற்றவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.