மொட்டு கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கட்சியின் மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் இடம்பெற இருப்பதால்
இதில் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருப்பதால் கட்சியை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இன்றையதினம் பொதுஜன பெரமுனவின் நடக்கவிருக்கும் நிலையில், அவ்விடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |