ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சலேவின் விவகாரத்தை மூடிமறைத்த தேசிய வைத்தியசாலை!

Sri Lanka Magistrate Court Suresh Salley
By Dharu Sep 22, 2026 12:38 PM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சதித் தன்மை வாய்ந்தது என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என  சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22) கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 42 வது பொது வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 வைத்தியசாலைப் பணிப்பாளர் சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது!

சலேயின் சுகாதார நிலைமை

சுரேஷ் சலேயின் தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் அவருக்கு தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை உள்ளதா என்பது குறித்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

எனினும், அந்த அறிக்கை முறையாக சமர்ப்பிக்கப்படாமை காரணமாக, தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, நீதிமன்றத்தில் முன்னிலையான வைத்தியசாலை அதிகாரிகள், சலேவுக்கு செலுத்தப்படும் ஊசி மூலமான (IV line) சிகிச்சை முறைகள் நிறைவடைந்தவுடன், வாய்மூலம் உட்கொள்ளும் மருந்துகளுக்கு மாற்றப்பட்டு, அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தனர்.

அதேநேரம், பணிப்பாளர் அரச அதிகாரி என்பதால் அவர் சார்பிலும் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஒன்பது வைத்தியர்கள் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட மருத்துவ அறிக்கையை நீதவானிடம் சமர்ப்பித்தார்.

சுரேஷ் சலே 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சதித் தன்மை வாய்ந்தது என்ற தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை கிடைக்கப்போகும் இந்ந நாள்...

40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கருவி

அவரது இதய வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கருவி ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு பல் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதுவரை காலம் இதய தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இருந்த சுரேஷ் சலே, நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து, நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பாதுகாப்பின் கீழ் பொது அறைக்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமைக்குள் மருத்துவக் குழுவொன்றின் மூலம் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.

இதன்போது, இவ்வாறான நோய்த்தாக்கங்களைக் கொண்ட சாதாரண நோயாளிகளை எவ்வாறு கையாள்வீர்கள் என நீதவான் வினவியபோது, சாதாரண நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சை முறைகளையே இவருக்கும் வழங்குமாறு தான் அறிவுறுத்தியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை செய்யும் நோக்கோ அல்லது சிகிச்சைகளை மறுக்கும் எண்ணமோ தமக்கு இல்லை எனவும், எனினும் அவர் தனது மடிக்கணினி (Laptop) மற்றும் கைபேசி (Mobile Phone) ஆகியவற்றின் கடவுச்சொற்களை (Passwords) இதுவரை வழங்காமல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளைத் தவிர்த்து வருவதாகவும் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெரேரா, சலே ஒரு புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் தினமும் தனது கடவுச்சொற்களை மாற்றுவதால், ஒரு வாரத்திற்கு முன்பு இருந்த கடவுச்சொற்கள் அவரது நினைவில் இல்லாதிருப்பது அசாதாரணமான ஒன்றல்ல என வாதிட்டார்.

இருப்பினும், அவர் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்தே கடவுச்சொற்களைக் கேட்டபோது, அந்த மடிக்கணினி தனது மகளுடையது எனக் கூறி, கடவுச்சொற்களை வழங்குவதை அவர் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்