ஆங்கில மொழிப் பாடத்தை வெற்றிகரமாக முடித்துள்ள ஐந்து எம்.பிக்கள்!
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
By Shadhu Shanker
இலங்கையில் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடநெறியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
இதற்கான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
இப் பாடநெறியை கேகாலை, காலி, குருணாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
கலந்துக்கொண்ட உறுப்பினர்கள்

ஆரம்பத்தில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர்களின் வசதிக்காக நாடாளுமன்ற அமர்வு நாட்களில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர மேலும், 42 நாடாளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்திற்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.