நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா...! அநுர அரசின் நிலைப்பாடு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara ) தெரிவித்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்த ஊடகவியலாளர்கள் வினவிய போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், "மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
தேசிய பாதுகாப்பு
அதற்காக ஒரு விசேட வேலைத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இது பாதாள குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது. ஆனால் அதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரிய பாதிப்பு இல்லை.
எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekara ) தெரிவித்துள்ளார்.
புதிய சிறப்பு அதிரடிப்படை
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக புதிதாக சேர்க்கப்பட்ட 500 சிறப்பு அதிரடிப்படை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்தோடு, தென் மாகாணத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்த நான்கு காவல்துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Public Security - Sri Lanka) தெரிவித்துள்ளது.
இந்த புதிய சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர்கள் விரைவில் தங்கள் பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு வருவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 2 நாட்கள் முன்
