எரிவாயு தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன!
Srilanka
gas explosion
Gas shortage
Small restaurants
Star treats
By MKkamshan
எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் என்பன காரணமாக, நாடளாவிய ரீதியில் 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தொழில் சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் எரிவாயு தட்டுப்பாடு குறித்து மாற்று வழிகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
உணவு தயாரிப்புக்காக விறகு அடுப்பைப் பயன்படுத்துவது பிரதான மாற்றுவழியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்ணெண்ணெய் அடுப்பும் பயன்படுத்தப்படுவதாக தொழில் சார் உணவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தில்ருக்ஷான் தாபரே தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி