மறு அறிவித்தல் வரை நாடுமுழுவதும் பொது முடக்கம்! பங்களாதேஷ் அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பங்களாதேஷில் நாடு தழுவிய பொது முடக்கத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் நாடு தழுவிய பொது முடக்கம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 108 பேர் பலியாகியுள்ளனர்.
அந்நாட்டில் தொற்று பாதிப்பு பரவத் தொடங்கிய பிறகு, ஒருநாளில் ஏற்படும் 2ஆவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, நாட்டில் பரவியிருப்பதால் டாக்காவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால், மறு அறிவிப்பு வரும் நாடு தழுவிய பொது முடக்கம் அமுலில் இருக்கும் என்று பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
அதே வேளை அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் அரசு அறிவித்துள்ளது.