கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோவுக்கு பாரிய நெருக்கடி
ஐரோப்பாவைப் பொறுத்தவரை, டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு திரும்பியமையானது உறுதியாக நம்பிய பல விடயங்களை ஒரே நேரத்தில் தீயிட்டு எரித்ததாக இருந்திருக்க கூடும்.
இவ்வாறான பின்னணியில் தற்போது டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை இணைப்பதற்கான அவரது நிர்வாகத்தின் அச்சுறுத்தல் , நேட்டோவை முன்னோடியில்லாத சூழ்நிலையில் ஆழ்த்தியுள்ளது.
கூட்டுப் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு கூட்டணியின், ஒருவர் மீதான தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதலாக இப்போது ஐரோப்பாவில் மாறியுள்ளதாக கருதப்படுகிறது.
மார்கோ ரூபியோ
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான "பல்வேறு விருப்பங்களைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதி விவாதித்து வருகிறார்.

வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இராணுவத் தலையீடு குறித்த கவலைகளை குறைத்து மதிப்பிட முயன்றாலும், அதற்கு பதிலாக ட்ரம்ப் நிர்வாகம் கிரீன்லாந்தை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தாலும், டென்மார்க்கின் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் குறித்த கருத்துக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றொரு நேட்டோ உறுப்பு நாட்டை இராணுவ ரீதியாகத் தாக்கத் தேர்வுசெய்தால், நேட்டோ உட்பட அனைத்தும் நின்றுவிடும் என அஞ்சப்படுகிறது.
பாதுகாப்பு தடை
இதனால் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து நிறுவப்பட்ட பாதுகாப்பு தடைபடுவதற்கான வாய்ப்பு உறுவாகியுள்ளது.

ஆனால் மற்ற ஐரோப்பிய தலைவர்கள், நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் கருத்துக்களை வெளியிடாது உள்ளனர்.
அமெரிக்கா இனி ஐரோப்பாவின் நம்பகமான கூட்டாளியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தற்போது அது அவசியமான ஒன்றாகவே உள்ளது.
இதற்கமைய ரஷ்யாவை எதிர்த்துப் போராட ஐரோப்பாவிற்கு அமெரிக்க இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவு தேவைப்படுவதால், கிரீன்லாந்திற்கு எதிரான ட்ரம்பின் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் அதை ஒரு பிணைப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 11 மணி நேரம் முன்