நாவற்குழி இடைநிலை சிகிச்சை மையம் தயார்
By Sumithiran
நாவற்குழி கொரோனா இடைநிலை சிகிச்சை மையத்தில் எந்த நேரத்திலும் 300 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
நாவற்குழி கொரோனா இடைநிலை சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு நாவற்குழி இடைக்கால சிகிச்சை மையத்தின் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
அச் சந்தர்ப்பத்தில், பாதுகாப்புப் படைகளின் தளபதி கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான வளங்களை ஆய்வு செய்து, புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் இடைநிலை சிகிச்சை மையத்தில் எந்த நேரத்திலும் 300 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்