வடக்கு உட்பட நாட்டின் கடற்பிரதேசத்தில் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் ஸ்ரீலங்கா கடற்படை

srilanka navy patrol
By Sumithiran May 04, 2021 12:40 PM GMT
Report

கடல் வழியைப் பயன்படுத்தி நாட்டிற்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கையின் கடற் பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் விஷேட கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

கடல் வழியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக பிரவேசிப்பதன் மூலம் நாட்டிற்குள் கொவிட் - 19 தொற்று நோய் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை கருத்திற் கொண்டு அவற்றை தவிர்க்கும் வகையிலேயே வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்டபில் ஸ்ரீலங்கா கடற்படையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் பொது மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விஷேட கடல் வழி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படைப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில்: 

விஷேட பாதுகாப்பு வேலைத் திட்டத்திற்கு அமைய இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பிராந்தியங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கப்பல்கள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகள் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச கடல் எல்லை பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கரையோர பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டும் கரையோர கண்காணிப்பு படகுகளும் விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விஷேட நடவடிக்கைகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து மேலதிக கப்பல்கள் மற்றும் படகுகள் வட பிராந்தியத்திற்கும், மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து சிலாபம் முதல் மன்னார் வரையான கடற் பிரதேசத்தின் ரோந்து நடவடிக்கைகளுக்கும் அனுப்பி வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகளுக்கு சமமாக மேற்படி கடற்பிரதேசத்தை அண்மித்த கரையோர பகுதிகளில் கடற்படையினர் தரைவழி ரோந்து நடடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் கண்காணிப்பு மையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடல் வழியைப் பயன்படுத்தி நாட்டிற்குள் சட்டவிரோதமாக எவரேனும் உட்பிரவேசிப்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அல்லது அவதானிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்குமாறும் வெளிநாட்டவர்களுடன் கடலில் எவ்வித தொடர்பை பேணுவதை தவிர்க்குமாறும் பிரதேச மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா கடற்படையினர் கடல் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்ததன் மூலம் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரவேசிக்க முற்பட்ட பலர் உடனடியாக எமது பொறுப்பில் எடுத்து மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது என்றும் கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் இந்திக சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026